மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், உணவு கையாலும் நிலையங்கள், உணவு உட்கொள்ளும் இடங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையை தவிர அதிக எண்ணிக்கையில் மக்களை உணவகங்கள், கடைகளினுள் வைத்திருக்கின்றமை பாரிய ஆபத்தை ஏற்படுத்துமென்றார்.
அத்துடன், எதிர்வரும் இரண்டு வராங்களுக்கு மக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.