யாழ். மாவட்ட மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமென, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ. ஜெயக்குமாரன் தெரிவித்தார். ஏனெனில், தங்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து ஏற்படும்போது, இந்த தடுப்பூசி பெற்றுக்கொள்வதனால் அந்த வைரஸினுடைய பாதிப்பு ஏற்படாடிதனவும், அவர் கூறினார். அத்துடன், ‘ஏற்கெனவே முன்னைய காலங்களில் ஏதாவது தொடர்ச்சியான ஒவ்வாமை இருப்பவர்கள், வைத்தியசாலைகளுக்கு சென்று தடுப்பூசிகளை கொள்வது மிகவும் சிறந்தது.
யாழ். மாவட்ட பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள், இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளன என, யாழ் மாவட்டச் செயலாளர்
க. மகேசன் தெரிவித்தார் அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே, ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் (03) தடுப்பூசி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.