கொழும்பு மாநகர சபையின் கீழ் சினோர்ஃபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்கு தவறியிருந்தால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 177 ஆகும்.
இதன்படி சுகததாச விளையாட்டரங்கில் அமைக்கப்படிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்குச் சென்று இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள முடியுமென கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
மாத்தளை பலாபத்வல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் கிளையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களில் 60 பேர், திடீரென சுகயீனமடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதியன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.