“முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது” என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 194 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதுடன், அந்த கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 92 பேர் இந்தியப் பிரஜைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில், 24 கிராம சேகவர் பிரிவுகள், நாளை (21) காலை 4 மணிமுதல் முடக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே பிரதேசங்கள் முடக்கப்படவுள்ளன.