மக்கள் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இந்த டெல்டா வைரஸ் மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள்
இது குறித்து தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்கள் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றா விட்டால் அடுத்த 8 வாரங்கள் தீவிரமாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 50 பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் இயக்குநர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
எனினும் கொரோனா தொற்றுநோயால் 11 தாய்மார்கள் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார்
இந்த நிலையில் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தின் அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய,மஹவத்த,ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.