மாத்தறை மாவட்டம்
உயன வத்த
உயன வத்த வடக்கு
யாழ்ப்பாணம் மாவட்டம்
நாரந்தனை வடமேற்கு
களுத்துறை மாவட்டம்
மலபடவத்த
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 47,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பரந்துபட்ட இடமாக காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதி கிராமங்களிலும், தடுப்பூசி ஏற்றப்படுவது தொடர்பில் மக்களுக்கு, சரியான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு தரப்பினரால் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியசாலையில், நேற்று (05) முதல் நடைபெற்று வருகின்றது
இதில், வயோதிபர்களுக்கு சரியான அறிவித்தல் விடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.