இலங்கை: கொரனா செய்திகள்

குறித்த மூன்று பகுதிகளில் இருந்தும் 19  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பிலியந்தலை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இதுவரை 38 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், நேற்றைய தினம் (14) 16  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட தொற்று நோயியல் பிரிவு
தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி – ஜெயபுரம் வீதி அபிவிருத்தி பணிகளோடு தொடர்புபட்டவர்கள், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள புகைப்பட கலையகமொன்றின் ஊழியர், வட்டக்கச்சியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரவலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முழுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் சுகதார பிரிவு கோரியுள்ளது.

சீனா மேலும் ஒரு தொகை ‘சினோபார்ம்’தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. 16 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை ஏற்கெனவே கொள்வனவு செய்துள்ள மேலும் 2 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளன. இதனை, ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேலும் விரைவுபடுத்த முடியும் என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்று தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.