அவ்வாறானவர்கள், கொழும்பில், கொலன்னாவ, கோட்டை, நவகமுவ ஆகிய பிரதேசங்களிலும் வத்தளையில் மாபாகே, அங்கொட, இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, முகக்கவசங்களை முறையாக அணியாதவர்களை கைது செய்வதற்காக, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாணத்தில் கூடுதலான எண்ணிக்கையானோர் முகக்கவசங்களை அணிவதில்லை என புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை கொடுத்துள்ளனர். இதனையடுத்தே, அவ்வாறானவர்களை கைது செய்வதற்காக, விசேட பொலிஸ் குழுகள் களமிறக்கப்பட்டுள்ளன.
தனி நபர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 30 பொலிஸ் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அமுல் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுபாடுகள், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் மாகாணங்களுக்கு இடையில், ரயில் மற்றும் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.