சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொழும்பில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் உள்ளது. எனினும், கொழும்பு நகருக்கு வரும் மற்றும் வெளியேறும் மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
“கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு கொரோனாவை வேகமாக பரப்ப கூடிய ஆபத்து உள்ளது. எனவே, பண்டிகை காலப்பகுதியை அவதானமாக கொண்டாட வேண்டும். இல்லை என்றால் ஆபத்தை ஏற்படுத்தி விடும். கொழும்புக்கு வரும் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 718 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலத்தில் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரில் இருந்து 150 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 125 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா இந்து கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது, ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்தே, கோவில் தற்காலிகமாக மூடப்பட்டது.