அதன்பின்னர், அந்த ஊரடங்கு உத்தரவை ஒரு மாதத்துக்கு முழுமையாக பிறப்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதல். தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டும், சுகாதார வழிமுறைகளை பலரும் முறையாக பின்பற்றாமையை கவனத்தில் கொண்டுமே இவ்வாறு ஊரடங்கை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதா அல்லது முழுமையான முடக்கத்துக்குச் செல்வதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எவையும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,325 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 314,507 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 44,134 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, மேலும் 167 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6,263 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் குறைந்தது 31 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேலும் 15 நகரங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, திருகோணமலை நகர மற்றும் மாநகர சபை, கேகாலை, சிலாபம், அம்பாறை, வென்னப்புவ, கெக்கிராவ, மொனராகலை, திவுலபிட்டிய, தெரணியகல, ஓரஸ்மங்கண்டிய, வாதுவை, பந்துரகொட, ரிக்கில்லககட ஆகிய பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அம்பலங்கொட, மரதகஹமுல்ல, வெயாங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, பலபத்வல, உல்பத, தங்காலை, பதுளை, பலாங்கொடை, வலப்பனே, பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தளை பகுதிகளிலும் வியாபாரம் நடவடிக்கைகள ஸ்தம்பித்தன.
சில நகரங்களில் உள்ள கடைகளை ஒரு வாரத்துக்கும், மற்ற நகரங்களில் இரண்டு வாரங்களுக்கும் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.