இலங்கை: கொரனா செய்திகள்

கிளிநொச்சியில் திங்கட்கிழமை முதல் 20 – 30 வயதுப்பிரினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த அவர்,

மாவட்டத்தில்  பதிவு செய்யப்பட்ட 20-30வயதுப் பிரிவினர் 28,482 பேர் உள்ளனர்.

அவர்களுக்கான முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை 20ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்  , தர்மபுரம் மத்திய கல்லூரி , முழங்காவில்  ஆதார வைத்தியசாலை   , பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

21ம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, அக்கராஜன்  மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம் , முழங்காவில் ஆதார வைத்தியசாலை , தர்மபுரம் மத்தியகல்லூரி ,பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

v