எனினும், குறித்த தடுப்பூசி இங்கு வழங்கப்படாது என இராணுவ மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தமை காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று காலை நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.
இருப்பினும், குறித்த மையத்தால் தடுப்பூசி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
களனி பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி
தாம் தடுப்பூசி எடுக்க வந்திருப்பதாக குறித்த மாணவர்கள் குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாடர்னா தடுப்பூசி இன்றும் நாளையும் மாலை 4 மணி வரை இராணுவ மருத்துவமனையில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பெயரை குறிப்பிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையுடன், மாணவர் அடையாள அட்டையை அளிப்பதன் மூலம் தடுப்பூசியை பெறலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மட்டும் மொடர்னா தடுப்பூசி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? என அங்கிருந்த மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
கடவுச்சீட்டு வைத்திருந்தவர்களுக்கு மட்டும் குறித்த தடுப்பூசி போடப்பட்டது என ஒரு இராணுவ அதிகாரி கூறினார்.