ரயில் நிலைய பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதால், பயணிகளின் நலன் கருதி ரயில் நிலையத்தை மூட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ரயில் நிலைய அதிபர்கள் இருவர் உள்ளிட்ட ரயில் நிலைய அலுவலக சபையினர் 6 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாளை(16) குறித்த ரயில் நிலையம் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளதென தெரிவித்த அவர், கூடிய விரைவில் ரயில் நிலையத்தை தற்காலிக அலுவலக சபையினரைப் பயன்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேருவளை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள ரயில் பயணிகளுக்காக, ஹெட்டிமுல்ல,மக்கொன ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாஸா இழுத்து மூடப்பட்டது. அங்கு பணியாற்றியவர்களில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதனையடுத்தே, பிளாஸா மூடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று ஏழு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், புதிய சாளம்பைக்குளத்திலிருந்து மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டிருந்தது. திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த சனிக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இன்று பரிசோதனைக்கான முடிவு கிடைக்கப்பெற்றது.
இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி, திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவற்றைவிட பம்பை மடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கற்குழி, திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஐந்து பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஏழாலையைச் சேர்ந்த மூன்று பேர், இணுவிலைச் சேர்ந்த இருவரும் என்று ஐந்து பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையே இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகியுள்ளது. அங்கு இன்று 98 பேரின் மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வலிகாமம், யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எழுத்துமூல ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மருதனார்மடம் கொவிட்-19 பரவலின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில், தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.