அந்த முடிவுகளின்படி கொழும்பு, கம்பஹா, மாத்தறை, அனுராதபுரம், மொனராகலை, புத்தளம் ஆகிய மாவட்ட முடிவுகளில் கோத்தபாயா ராஜபக்ச சஜித் பிரேமதாசாவை விட மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேநேரம் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் சஜித் பிரேமதாசா கோத்தபாயாவை விட கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் சஜித் பெற்ற வாக்குகளில் முப்பது வீதம் வரை கோத்தாவும் பெற்றுள்ளார். திருகோணமலையில் சஜித்துக்கும் கோத்தாவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஆயிரத்துக்கு குறைவாகவே உள்ளது.
இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா 60 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என அனுமானிக்க முடிகிறது.