தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் சிங்கப்பூர் பிரஜைகள், இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்கள் மற்றும் அதிகளவான மக்கள் குழுமியிருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ள அவர், முடிந்தளவு பாதுகாப்பாக தங்கியிருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் உலகின் பல நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையில் தங்கியிருக்கும் தமது நாட்டு பிரஜைகளைப் பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை அந்த நாடுகள் முன்னெடுத்துள்ளன.
அத்துடன், சிங்கப்பூர் மாத்திரமின்றி பல உலக நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறும் தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன.