வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கே இவ்வாறு பிரதமர் நேற்று (02) பணிப்புரை விடுத்துள்ளார்.
பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1,500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அதற்கமைய பெலாரஸிலுள்ள சுமார் ஆயிரத்து அறுநூறு மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் பெலாரஸிற்கு அருகிலுள்ள இலங்கை தூதரகமான மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி சில வாரங்கள் கல்விப் பணிகளை தாமதிப்பது குறித்தும் அவர்களுக்கு ரஷ்யாவுக்கான விசாவினை பெற்று இலங்கைக்கு செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.