இந்தியாவின் உயர்மட்ட கப்பல் வரிசைகளில் ஒன்றான Cordelia Cruises உடனான புதிய கூட்டாண்மையைப் பயன்படுத்தி, Advantis குழுவினர் சென்னையில் இருந்து வந்த 1,600 சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றனர். இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய மேள கலைஞர்களின் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.