இலங்கை வாழ்க்கைச் செலவு

மக்கள் வங்கியில் பரிணத வைப்பில் ரூபா 550,000/- வைப்பிட்டால் 15.5% வட்டி =
550,000 ×15.5÷100 = ரூபா85,250/-
வருடத்துக்கு கிடைக்கும். எனவே
மாதத்துக்கு 85250÷12=ரூபா7104.17கிடைக்கும். இதில் பிடிப்புவரி( WHT) 5%,
நீக்கி கிடைப்பது 7104.17×95÷100 = ரூபா6748.96…..

இன்றைய வாழ்க்கை செலவு உயர்வில் 5 1/2இலட்சம் நிலையான வைப்பிலிருந்து கிடைக்கும் வட்டி ரூபா 6749/- மாதந்தம்
மின்கட்டண,தொலைபேசிக் கட்டணங்கள் செலுத்த போதாது.
2023ஏப்ரல் மாத கட்டணங்கள்
பின்வருமாறு
Dialog 613.86 + Mobitel 541.59 +
CEB 3768.21 + SLT 2026.42 = ரூபா
6920.08
மாதாந்த ஓய்வூதியம் ரூபா 41,500/- பெறுபவருக்கு ஆறிலொரு பங்கு மின்சார+ தொலைபேசி+Internet செலவாகும்.
இந்து தர்மத்தின் படி1/6 ஐ அரசனுக்கும், 1/6 கடவுளுக்கும், 2/3 ஐ நீயும் எடுத்துக் கொள்ளலாம் என்ற தர்மம் பின்பற்றப்பட்டது. வேறு மதத்தவர்
1/10 ஐ இறைவனுக்கு செலுத்துவர்.
ஆனால் நீர் வரி,தொலைக்காட்சி, வானொலி, எரிபொருள் (வாகனத்துக்கும்,சமையலுக்கும்)
நீக்கி தொடர்பாடலுக்கும் மின் ஒளிக்கும் 1/6 க்கு மேல் அமைவது நாட்டு நலனுக்குகந்தது அல்ல். எனவே
மின் கட்டண அறவீடு மறுசீரமைத்தல் காலத்தின்
கட்டாயமாக அமுல் நடத்தப்படல்
அவசியமாகும். மின் கட்டண வழங்கல் செலவைவிட, மின்கட்டண அறவீடு மிக அதிகம்.
இதை ஜனாதிபதி கவனத்தில்
கொள்ளாதுவிட்டால் அவரது சுபீட்சமான அரசியல் எதிர் காலத்தை பாதிக்கலாம்?.
குறிப்பு:- மாதாந்த வட்டி வருட வீதம் 14.5% மாக மக்கள் வங்கியில் குறிப்பிடப்பட்ட போதும் போட்டி சந்தை நிலமையை கருத்தில் கொண்டு
1% அதிகரித்து 15.5%த்தில் கணிப்பு மேற்கொள்ளப் பெற்றது.

(Kathir Pillai)