மேலும் அவர் இவ்வாறு உயரமாக இருப்பதற்கு மார்ஃபன் சிண்ட்ரோம் என்ற மரபணு கோளாரே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது உடல் பாகங்களின் வளர்ச்சி தடைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்திற்கு கானாவின் பொது மருத்துவ காப்பீடு துறையால் அனுமதி வழங்க முடியாத சூழலில், அடிப்படை சிகிச்சைகளை மட்டுமே எடுத்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி ரீசார்ஜ் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவுச்சியைக்காண்பதற்காக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவதாகவும் இதனால் அப்பகுதியில் பிரபலமான ஒருவராக அவர் வலம் வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுச்சி கூறும் போது, “அல்லா என்னை இப்படி இருக்கவே படைத்துள்ளார். அதனால் உயரமாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.