உடனடியாக வெளியேறவும்
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யதனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த மோசமான நகரத்தில் இருந்து (காசா முனை) ஹமாஸ் நிலைநிறுத்தப்பட்டு, மறைந்திருந்து செயல்பட்டு வருகிறது. அந்த பகுதிகளை நாங்கள் கட்டிட சிதைவுகளாக மாற்றப்போகிறோம். காசாவில் வாழும் மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், அனைத்து பகுதியிலும் நாங்கள் முழு பலத்துடன் செயல்பட உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
இருளில் மூழ்கியது காசா
காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சனிக்கிழமை (07) இரவு முழுவ காசா இருளில் மூழ்கியது.
300 பேர் படுகொலை
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மோடி அதிர்ச்சி: பைடன் ஆதரவு
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கான முழு ஆதரவை உறுதிப்படுத்தினார்.
குண்டு மழை பொழிந்தன
காசா பகுதியில் பதிலடி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் இராணுவம் பணிக்கு அழைத்துள்ளது.
இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தற்போது பிரேசில் தலைமை வகிக்கிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுப்போம் என பிரசேில் கூறியுள்ளது.
பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரேசில் கண்டனம் தெரிவிக்கிறது. இஸ்ரேல் மக்களுக்கு பிரேசில் துணை நிற்கும். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.
ஹமாஸ் கமாண்டர் அழைப்பு
பாலஸ்தீன மக்களுக்கு ஹமாஸ் கமாண்டர் முகமது அல்-தேப் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘உங்களிடம் துப்பாக்கி இருந்தால், அதை எடுத்துக் கொண்டு போருக்கு செல்லுங்கள். துப்பாக்கிகளை பயன்படுத்த இதுதான் சரியான நேரம். உங்களிடம் உள்ள வாகனங்களை எடுத்துக் கொண்டு போருக்கு செல்லுங்கள். மிக முக்கியமான வரலாறு இன்று தொடங்குகிறது’’ என கூறியுள்ளார்.