இஸ்ரேலுக்கு அமெரிக்கா காலக்கெடு

ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது, வடக்கு காசாவில்  இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும் இந்த தாக்குதல்  ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த மாதம் வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதமான மனிதாபிமான இயக்கங்களை இஸ்ரேல் நிராகரித்தது அல்லது தடை செய்தது என்றும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரி இது குறித்து கூறுகையில், “இஸ்ரேல் கடிதத்தை மறுஆய்வு செய்து வருகிறது, இந்த விடயத்தை தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.  அமெரிக்க சாடியுள்ள குறலறச்சாட்டுகளை  நிவர்த்தி செய்ய விரும்புகிறோம்” எனக் கூறினார்.

 வடக்கில் ஹமாஸ் செயற்பாட்டாளர்களை குறிவைப்பதாகவும் மனிதாபிமான உதவிகளை நிறுத்தவில்லை என்றும் இஸ்ரேல் முன்னர் கூறியுள்ளது.

Leave a Reply