இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, இஸ்ரேலில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம், நெதன்யாகு விளக்கினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்புக்கும், இஸ்ரேலில் தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்ததற்கும் நன்றி. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர் என்றும், தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிப்பதாகவும் நெதன்யாகுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.