மேலும் ஐ.நா.வுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி, ஐ.நா. சபையில் பேசும்போது, “பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம்” என்றார்.
இதற்கிடையே கொலம்பியா, சிலி ஆகிய நாடுகள் தங்களது இஸ்ரேலுக்கான தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன. இதுதொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சகம் கூறும்போது “காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச்சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கான சிலி தூதர் ஜார்ஜ் கர்வாஜலை சாண்டியாகோவிற்கு திரும்ப அழைக்க சிலி அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.