ஈரான் ஜனாதிபதியானார் பெசஸ்கியான்

இதில் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசஸ்கியான் 42.5 சதவீத வாக்குகளும், 2ம் இடம் பெற்ற சையது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றனர். ஆனாலும், ஈரான் அரசியலமைப்பு சட்டப்படி, வெற்றி வேட்பாளர் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும். இதனால், முதல் 2 இடங்கள் பிடித்த பெசஸ்கியான் மற்றும் சையது ஜலீலி இடையே 2ஆம் கட்ட தேர்தல் கடந்த 5ஆம் திகதி நடந்தது.

இதில், பெசஸ்கியான் 1.63 கோடி வாக்குகளும், ஜலீலி 1.35 கோடி வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம், ஈரான் ஜனாதிபதியாக பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் அடுத்த ஒருமாதத்திற்குள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது