அதைத் தொடர்ந்து ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நவம்பவர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன், தென்னாபிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதையடுத்து, ‘அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்’ என, அமெரிக்க ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ”ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்தும்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்,” எனத் தெரிவித்துள்ளார்.