மேலும் உக்ரேனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மரியுபோல் நகரில் பொது மக்கள் 500 பேரை ரஷ்ய இராணுவம் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிராந்திய தலைவர் பாவ்லோ கைரி லேன்கோ கருத்துத் தெரிவிக்கையில் ‘‘மரியுபோல் நகரில் உள்ள வைத்தியசாலையை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதோடு, சுமார் 500 பேரைப் பணக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இதில் 100 வைத்தியர்கள் மற்றும் நோயாளிகள் சிக்கி உள்ளனர் ” என்றார்.
மேலும் வைத்தியசாலையைக் கைப்பற்றியுள்ள ரஷ்ய படை, அங்குள்ளவர்களை மனித கேடயங்களாகப் பயன் படுத்தி யாரையும் உள்ளே அனுமதிக்காதபடி செயல்படுகின்றனர்’’ எனவும் அவர் தெரிவித்தார்.
இச்செய்தியானது உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.