உக்ரைன் போர் விவிகாரம்:புட்டினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

புட்டினை சந்திப்பது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கூறிய அவர்,

“உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷ்யா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது.

“ எனக்கு புட்டினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார். மிகவும் எளிமை. அவர் மக்களை அவமதிக்கிறார். அவர் புத்திசாலி. அவர் புரிந்துகொள்கிறார். அவர் பைடனை அவமதித்தார்.

“அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல இலட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன,” என்று தெரிவித்தார்.