உப்புத் தட்டுப்பாடு; இறக்குமதிக்கு அனுமதி

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போதுள்ள தீர்வை விகிதத்தின்படி, 30,000 மெட்ரிக் டன் கச்சா அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இறக்குமதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.