(க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் புரியும் தமிழ் மாணவர்களின சிறப்பாக யாழ்மாணவர்களின் கல்வித்தரம் எந்நிலையை அடைந்திருக்கின்றது என்பதை. இது போரின் பின்னரான வளர்ச்சி நிலையை எடுத்துக்காட்டம் ஒரு காலக் கண்ணாடியாகவும் அமைகின்றது. -ஆர்)
இன்று (03) வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் அதிகூடிய இஸட் புள்ளிகைளப் பெற்று நாடாளவிய ரீதியில் முதலிடம் பெற்றோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தக பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற அகீல் மொஹமட் நாடாளவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தின் மாணவராவார்.
அத்துடன் கணித பிரிவில் மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி எஸ்.நிசாங்கனி 4ஆம் இடம் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பாலசுப்ர மணியம் ஞானகீதன் 3ஆம் இடத்தையும், கலை பிரிவில் கொழும்பு பெண்கள் கல்லூரியின் பாதிமா அமீரா இஸ்மாயில் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
1ஆம் இடம் – தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி பெண்கள் பாடசாலை.
2ஆம் இடம் – ஜே.எம்.எம். முன்சிப் – புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான வித்தியாலயம்.
3ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலை.
கணித பிரிவு
1ஆம் இடம் – தசுன் ஜயசிங்க – கொழும்பு ரோயல் கல்லூரி.
2ஆம் இடம் – நதீஷான் திசாநாயக்க – குருணாகலை மலியதேவ ஆண்கள் பாடசாலை.
3ஆம் இடம் – சச்சின் நில்மந்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்.
4ஆம் இடம் – எஸ்.நிசாங்கனி – மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை.
பொறியியல் தொழில்நுட்பம்
1ஆம் இடம் – சானக அநுருத்த – மாத்தளை புனித தோமஸ் கல்லூரி.
2ஆம் இடம் – இராஷ புத்திக – கொழும்பு ஆனந்தா கல்லூரி
3ஆம் இடம் – பாலசுப்ர மணியம் ஞானகீதன் – யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
உயிரியல் தொழில்நுட்பம்
1ஆம் இடம் – நவோதினி மாரசிங்க – பண்டாரவளை தர்மபால மகா விதியாலயம்.
2ஆம் இடம் – கருணை நாயகம் ரவீகரன் – யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி.
3ஆம் இடம் – உபுலி அனுக்தரா – கேகாலை ஸ்வர்ணஜயந்தி மகா வித்தியாலயம்.
கலை பிரிவு
1ஆம் இடம் – ஜீவான நயனமாலி – குருணாகலை மலியதேவ பெண்கள் பாடசாலை.
2ஆம் இடம் – நிராஷா குலரத்ன – கண்டி புஷ்பதான பெண்கள் பாடசாலை
3ஆம் இடம் – பாத்திமா அமீரா இஸ்மாயில் – கொழும்பு பெண்கள் கல்லூரி