உருகுவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

இதில் ஆளுங்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அல்வாரோ டெல்கடோ களமிறங்கினார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் யமண்டூ ஓர்சி (வயது 57) போட்டியிட்டார்.

இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், யமண்டு ஓர்சி 49.8 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட டெல்கடோ 45.9 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார்.