பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் இரண்டாயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் முப்பதாயிரம் உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இவ்வாறான தரவரிசையைப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் பேராதனை பலக்லைக்கழகம் எனவும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.