உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று(15) 30 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட ஆகக் குறைந்த விலை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களில் எண்ணெய் விலை 70வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் மக்களுக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் வழங்கப்படவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. குறித்த யோசனைக்கு நிதியமைச்சின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்படும் என்று கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .