கேகாலையில் இன்று (18) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், இடைத்தரகர்களின் காரணமாக இறப்பர் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும், அதனால் இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் குறைந்து செல்வதாக மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அத்தோடு, மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் அறிவுருத்தப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அரசியல் கலாசாரத்துக்கு இப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன், சுவரொட்டிகள் இன்றி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முன்னெடுத்துவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மொரலியகொட வீதி உட்பட உள் வீதிகள் அபிவிருத்தி , குடிநீர் பிரச்சினை குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததையடுத்து,
ஒரு லட்சம் கி.மீ வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி , இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தின் பட்டதாரிகளின் பிரச்சினைகள் , பட்டதாரி சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அவர் அவதானம் செலுத்தியிருந்ததுடன், தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தரிசு நிலங்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.