இத்தேர்தல் களத்தில் பல்வேறு சமூக விரோத சக்திகள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருடர்கள், சண்டியர்கள், காடைத்தனங்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள், பெண்களை இழிவுபடுத்தியோர் என பலதரப்பட்டவர்களும் இத்தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் பல சமூகவிரோத சக்திகளை தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.
தமிழ் காங்கிரஸ் – தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் பெரும்பாலும் சட்டத்தரணிகள். இச்சட்டத்தரணிகள் யாரைக் காப்பாற்ற வழக்காடினார்களோ அவர்களில் பல குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கி உள்ளனர். யாழ் மாநகரசபை எல்லைக்குள் வாள்வெட்டில் ஈடுபட்டவர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சட்டத்தரணி சிறிகாந்தா களமிறக்கி உள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாநகரசபைக்கு களமிறக்கிய சுந்தர்சிங் விஜயகாந் களவாடப்பட்ட நகைகளை வங்கிக்கு கொண்டு சென்ற போது வங்கியில் பணியாற்றிய பெண்ணினால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் அந்நகைகள் அவர் வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டது. 116 பவுண் திருட்டு வழக்கில் இவருக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் விஜயகாந்தினால் தேர்தலில் களமிறக்கப்பட்ட 13 பேரும் அவருடைய நட்புகளும் உறவுகளுமே.
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரான இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார். கிளிநொச்சியில் கந்துவெட்டிக்கு பணம்கொடுக்கும் சண்டியர் எனப் பலர் பா உ சிறிதரன் போன்றவர்களால் களமிறக்கப்பட்டு உள்ளார்கள்.