இதனால் பதறிப் போன பிரியங்காவின் குடும்பத்தினர், அந்த இடத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு பிரியங்கா இல்லை என்றதும், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருந்த நிலையில், அதிகாலையில் எரிக்கப்பட்ட நிலையில் பிரியங்கா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரியங்காவின் இந்தக் கொடூர மரணத்துக்கு கண்டனக் குரல்கள் பலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்
சமூக வலைதளங்களில் JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை சிலர் உருவாக்கியுள்ளனர். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய நபர்களை டேக் செய்தும் வருகிறார்கள். `இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்றும் கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்றும் கொதித்துப் பதிவிட்டு வருகிறனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனைகள் வழங்க சட்டங்கள் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
‘ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டோம். அதைப் பெண்களுக்கு கொடுத்தோமா?’ எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்மனிதம் செத்துவிட்டது எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்…’ என்பன போன்ற ஏராளமான பதிவுகள் பிரியங்கா மரணம் தொடர்பாக பதிவிடப்பட்டு வருகின்றன.