எட்டு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும்.