ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளமைத் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற எதிர்பார்த்துள்ளதாகவும், இந்த பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.