ராஜபக்சவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான திறமை இருந்தாலும் ராஜபக்ஷர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதற்கு ராஜபக்சர்கள் இடமளிக்க கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
ராஜபக்ஷர்கள் நெருங்கினால், எந்த நேரத்திலும் ஜனாதிபதி ரணில் பின்வாங்க நேரிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.