என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு !!??

டெல்லில நேத்திக்கு
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜேவாலா ஆதாரங்களோட
இந்த ‘ பகீர் ‘ விஷயத்தை வெளியிட்டிருக்காரு.

கர்நாடக முதல்வரா எடியூரப்பா இருந்தப்போ, பாஜக மூத்த தலைங்களுக்கு
லஞ்சப் பணத்தை அள்ளியள்ளிக் குடுத்திருக்காரு.

அவர்ட்ட துட்டு வாங்கினவங்கெல்லாம் பாரதிய ஜனதாவோட மத்திய கமிட்டி தலைவர்களாம். அதுவுமில்லாம, நீதிபதிங்க வக்கீலுங்ளுக்கும் அள்ளிக் குடுத்திருக்காராம்.

இதுபத்தி, THE CARAVAN பத்திரிகை வெளியிட்டிருக்கற ‘எடியூரப்பாவோட டைரி ‘
ஆதாரங்களைக் காட்டி சுர்ஜேவாலா
பட்டாசு கொளுத்திப் போட்ருக்காரு .

2017 வரைக்கும் இன்கம் டேக்ஸ் புலனாய்வுத்துறைகிட்ட இருந்த இந்த டைரில யார்யாருக்கு எவ்ளோ லஞ்சப் பணம் எப்பப்போ கொடுத்தேன்னு எடியூரப்பாவே கன்னடத்தில கைப்பட எழுதினதும் இல்லாம – ஒவ்வொரு பக்கத்துலேயும் கையெழுத்துவேற போட்டுவெச்சிருக்காராம்.

சரி, அப்படி என்னதான்
எழுதிருக்காம் அதில?

‘ பாஜக மத்திய கமிட்டிக்கு ரூ.1000 கோடி,
அருண் ஜெட்லி – நிதின் கட்கரிக்கு
ஆளுக்கு 150 கோடி, ராஜ்நாத் சிங்கிற்கு
100 கோடி, மூத்த தலைங்க எல்.கே.அத்வானிக்கு ரூ. 50 கோடி,
முரளி மனோகர் ஜோஷிக்கு
ரூ.50 கோடி – கட்கரி மவன் கல்யாணத்துக்கு ரூ.10 கோடி ‘ன்னு லஞ்சப்பணத்தை
தாரை வார்த்திருக்காரு நம்ப எடியூரப்பா.

சௌகிதார் – காவல்காரன்னு போட்டுக்கிட்டாமட்டும் போறாது –
மோடி இதுக்கு பதில் சொல்லியாவணும்னு
மேற்படி சுர்ஜேவாலா சொல்லிருக்காரு.

டைரில இருக்கற ஒவ்வொருத்தரும்
பதில் சொல்லியாவணும் –
இந்த மஹா லஞ்ச விவகாரம்பத்தி
லோக்பால் விசாரணை
நடத்தியாவணும்னும்
சொல்லிருக்காரு.

என்னங்க நடக்குது ஊர்நாட்ல?

நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதிய !


ஆதாரம் / tamil.oneindia.com