தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் எமில்காந்தனுக்கு எதிரான சர்வதேச பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எமில்காந்தனுக்கு எதிரான தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராடா நிறுவனம் சுனாமி வீடமைப்பு திட்டதத்தினை முன்னெடுப்பதாகக் கூறி 168 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடிகளுடன் எமில்காந்தனுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமில்காந்தன் தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நீதிமன்றில் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகவும், இலங்கை நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையை நீக்குமாறும் எமில்காந்தனின் சட்டத்தரணிகள் நேற்றைய தினம்கோரியிருந்தனர். எனினும் இந்தக் கோரிக்கையை