எம்.பி ஆகிறார்‌ ரணில்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா செய்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன.

சமீபத்தில்  ரணில் விக்கிரமசிங்க காலி பகுதிக்கு விஜயம் செய்தபோது, மக்கள் அவரை பாராளுமன்றத்திற்கு வந்து பொது சேவையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். இந்த கட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க, “தயவுசெய்து பொறுமையாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.

Leave a Reply