எரிபொருட்களின் விலையில் திடீர் மாற்றம்

இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன் 319 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.