அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தமது எரிபொருளின் விலைகளை மாற்றமின்றி தொடர தீர்மானித்துள்ளன.