(Arun Ambalavanar)
தமிழரசுக்கட்சியின் 60 களின் சத்தியாகிரகம் பின்னர் 70 களில் கூட்டணியினராகி தமிழீழ கோரிக்கை என்பதற்கான ஒரு சமூக அரசியல் பின்னணி இருந்தது. அமிர்தலிங்கம் போன்றவர்கள் இளம் வயதிலேயே போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி ரோட்டுக்கு வந்தவர்கள். அரசியலால் எல்லாவற்றையும் இழந்தவர்கள். அவர்களின் அரசியலில் விமர்சனம் இருப்பினும் அவர்களில் பலர் தம்மை தாம் கொண்ட அரசியலுக்காக இழந்தவர்கள். அதற்காக முற்றாக உழைத்தவர்கள். அவர்க்ளது ஒரு சில தவறுகள் ஆயுத போராட்டத்திற்கான காரணிகளில் ஒன்றெனினும் அது மட்டும் காரணமல்ல. இலங்கை அரசின் 83 வெறித்தனமே மூல காரணமானது ஆனால் தமது பதவிக்காலம் வரைக்கும் இலங்கை அரசயந்திரத்தின் ஏவலாளாக இருந்து பயங்கர வாத சட்டத்தின் கீழ் பல இளைஞர்களுக்கு தண்டனை கொடுத்த விக்கி தான் ஓய்வு பெற்ற பின் எழுக தமிழ் என கொடிபிடிப்பது போன்ற அபத்தம் எதுவுமில்லை