அந்த கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. அதற்காக கட்டணச்சீட்டும் விநியோகிக்கப்படுகின்றது.
வருமான முகாமை மற்றும் பராமரிப்பு என்பன பெளத்த அடையாளம் இருப்பதாக சொல்லப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
விநியோகிக்கப்படும் கட்டணச்சீட்டில், இது அநுராதபுர காலத்தில் பயன்படுத்தியதாகவும், தொல்லியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் இது அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.