தற்போது சிக்கலாகியுள்ள பிரதமர் பதவி குறித்து ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்துக்கு செல்லாதது ஏன் என்பது தொடர்பில் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வித பதிலையும் வழங்கவில்லையென்று ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு, பிரதமராக ரணிலை சட்டவிரோதமாக நியமித்ததைப் போன்றே, இம்முறையும் பிரதமர் ஒருவரை சட்டவிரோதமாக நியமித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டி.யு. குணசேகர தெரிவித்துள்ளார். அன்று விவசாயியின் மகனான ஜயரத்னவை பிரதமர் சட்டவிரோதமாக பதவி விலக்கும் போது, அமைதியாக இருந்தவர்கள் இன்று அதேப்போன்று ரணிலை பதவி நீக்கவும் பாரிய எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.