பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று மட்டக்களப்பு வவுணதீவுக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆகியோரே, அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளனர்.மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கே, அக்குழுவினர் அங்கு விஜயம் செய்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.