ஒக்சிஜன் இல்லாமையால் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றை விசாரித்த புதுடெல்லி உச்சநீதிமன்றம். புதுடெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.
இதனையிடையே மற்றுமொரு மனுவை விசாரித்த புதுடெல்லி உச்சநீதிமன்றம், ஒக்சிஜன் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.
நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும்.
ஒக்சிஜனை பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஒக்சிஜனை விநியோகம் செய்யுங்கள்” என மத்திய அரசை, உச்சநீதிமன்றம் காட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.