- 2024 அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடைநிலை அறிக்கைகைகளை தவறாக பொருள் கோடல் செய்து ” ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தவில்லை திருப்பி அனுப்பப்படுகின்றது” என்று சொல்லப்பட்ட தவறான கருத்து தொடர்பாக…
நிதியை இரண்டு நிறுவனங்களுடாக மத்திய அரசு அனுப்புகிறது.
ஒன்று மாகாண சபை ஊடாக அனுப்பப்படுகின்றது
இரண்டாவது மத்திய அமைச்சுக்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கான நிதியை அரச அதிபர்களுடாக அனுப்பப்படுகின்றது .
இங்கு மாகாணசபைக்கு மீண்டெழும் செலவினம், மூலதன செலவு என இரு பிரதான வகையில் நிதி ஒதுக்கப்படுகின்றது.
இதில் மீண்டெழும் செலவினம் என்பது மாகாண அரசநிர்வாக செலவீனங்களுக்கான நிதியை குறிக்கும்.
மூலதன செலவு என்பது மாகாண அமைச்சுக்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களுக்கான நிதியாகும்.
இவ் மூலதனச் செலவினமானது செயற்திட்டங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தின் மார்ச் மாதம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படும்
பொதுவில் மாகாணசபையின் மூலதன கோரிக்கையில் 20 – 40 வீதமே மத்திய அரசு அங்கீகரிகின்றது
எடுத்து காட்டாக 2015 யில் மாகாணசபை 8,000 KM உள்ளக வீதிகள் புனரனமைப்புக்கு மூலதன நிதி கோரிய போதும் 7 முதல் 10 KM க்க்கான மூலதன நிதியை மட்டுமே அங்கீகரித்திருந்திருந்தது .
அதுமத்திரமின்றி ஒதுக்கப்படும் நிதி (allocating funds) முழுவதும் விடுவிக்கப்படாது (releasing funds) என்பதும் மிக முக்கியமானது.
அதே போல அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளை செலவு செய்யும் முறைகள் குறித்த வழி காட்டல்களையும் தேசிய திட்டமிடல் திணைக்களமே வழங்குகின்றது
குறிப்பாக இவ் ஆண்டு தேசிய திட்டமிடல் திணைக்களம் ஒதுக்கீடுகளில் வெறும் 60 வீதத்திற்குள் செலவுகளை மட்டுப்படுத்த வழிகாட்டியிருந்தது .
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் செலவு கட்டுப்பாட்டை 80 வீதமாக அதிகரித்தார்கள்
இவ்வாறான வழிகாட்டல்களுக்கு அமையவே அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன .
இவ்வாறான வழிகாட்டல்களுக்கு மத்தியிலும் மத்திய திறைசேரியின் ஒதுக்கீடுகள் நிதி வடிவில் மாகாணத்திற்கு முழுமையாக விடுவிக்கப்படுவதில்லை .
நிதியை திறைசேரியிலிருந்து பெற்று கொள்ள மாகாண திணைக்களங்கள் தாங்கள் நடைமுறைப்படுத்திய செயற்திட்டங்களின் பற்றுச்சீட்டுகளை மாகாணத்தின் திறைசேரிக்கு அனுப்பி வைப்பார்கள் .
மாகாணத் திறைசேரி பற்றுசீட்டுகளின் அடிப்படையில் நிதி கோரிக்கையை மத்திய திறைசேரிக்கு அனுப்பி வைக்கும்
அதன் தொடர்ச்சியாக விடுவிக்கப்படும் நிதி மாகாண திணைக்களங்கள் ஊடக கொடுக்கல் வாங்கலுக்கு வழங்கப்படும் .
அதே போல இங்கே அரச நிதி அறிக்கையிடலில் நிதி கொடுப்பனவு முக்கியமானது .
குறிப்பாக ஒரு அபிவிருத்தி செயற்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த பட்ட பின்னரும் மத்திய திறைசேரியின் தாமதத்தால் அதற்கான கொடுப்பனவு மேற்கொள்ளப்படாவிட்டால் குறித்த செயற்திட்டம் முழுமையடைந்து விட்டதாக அறிக்கையிட முடியாது .
அதாவது 100% பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் கொடுப்பனவுகள் 20 வீதம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் அந்த 20 வீதம் பணிகள் முடிவடைந்ததாக மட்டுமே அறிக்கையிட வேண்டும் .
ஆகவே 13. 12.2024 இல் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடைநிலை அறிக்கைகைகளை தவறாக பொருள் கோடல் செய்து நிதி பயன்படுத்தவில்லை என்றும் மீள திரும்பும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்ட கதைகளில் உண்மையில்லை .
வருட இறுதி வெறும் 20 நாட்களில் தான் நிதியை செலவளிக்கின்றார்கள் என்பதும் கூட பொது நிதி முகாமைத்துவம் குறித்த எந்த அறிவுமற்ற புகாராகும் .
வடக்கு அரச நிறுவனங்களின் நிதி நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக பொதுக் கணக்குகளை மதிப்பீடு செய்வதற்கான இலங்கை பாராளுமன்ற குழுவின் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் இந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும் .
வடக்கு மாகாணத்தின் 32 அரச நிறுவனங்களும் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி நிர்வாகத்தில் பொதுவில் தொடர்ச்சியாக முன்னனணியில் இருக்கின்றன .
குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தின் 32 அரச நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் பாராளமன்ற மேற்பார்வை குழுவிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டன.
அதே போல இலங்கை பட்டய கணக்கறிஞர் நிறுவணம் (ICASL) அரச நிறுவனங்களின் கணக்கறிக்கைகளை ஆய்வு செய்து Best Annual Report & Accounts (BARA) awards என்கிற விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது.
The judging criteria focused on adherence to Ministry of Finance circulars for financial account preparation and presentation, as well as compliance with Sri Lanka Public Sector Accounting standards.
இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் சிறந்த நிறுவனமாக வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டது .
Specially, The Chief Secretary’s Secretariat has been awarded the Gold Award, while the Provincial Treasury has earned the Bronze Award..
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி போகின்றது என்று வதந்தி பரப்புவது கண்டிக்கப்பட வேண்டியது.
Thankyou – Santhadevi Tharmaretnam