ஒன்றரை வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் ; ஜனாதிபதி உறுதி

இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நீண்டகால திட்ட காலக்கெடு மற்றும் முதலீடுகளைப் பேணுவதற்கான தடைகள் உட்பட இலங்கையின் தற்போதைய சவால்கள், ஊழல் போன்ற பிரச்சினைகளால் அடிக்கடி கூறப்படும் விவாதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அனைத்து செயற்பாடுகளையும் இலகுவான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க அமைப்பாக நெறிப்படுத்துவதற்கு தமது நிர்வாகம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

Leave a Reply